இனி காய்களை நகர்த்துதல் குறித்த விதிமுறைகளைக் காண்போம். வீரர்களை(Pawn) நகர்த்துவதிலிருந்து ஆரம்பிப்போம். விதிமுறை # 1 வீரர்கள் எப்போதும் எதிரணியை நோக்கி முன்னால் மட்டும்தான் செல்ல இயலும். அதாவது வெளிர் நிற வீரர்கள் எதிரணியான அடர் நிறத்தின் பக்கத்தை நோக்கியே முன்னேற இயலும். அடர் நிற வீரர்கள் எதிரணியான வெளிர் நிறத்தின் பக்கத்தை நோக்கியே முன்னேற இயலும்.
விதிமுறை # 2வீரர்களை முதன்முறை மட்டும் இரண்டு கட்டங்கள் அல்லது ஒரு கட்டம் முன்னே உள்ள எதிரணியை நோக்கி நகர்த்தலாம் விதிமுறை # 3வீரர்கள் முதன் முறை தவிர மற்ற சமயங்களில் ஒரே ஒரு கட்டம்தான் முன்னேறிச் செல்ல இயலும். வெளிர் நிற வீரன் நகர்த்தலுக்கான விளக்கப்படம் எடுத்துக்காட்டாக, வெளிர் / வெள்ளை நிறத்தில் இரண்டாம் வரிசையில் இருக்கும் எந்த வீரனையும் முதலில் இரண்டு கட்டங்கள் அல்லது ஒரு கட்டம் முன்னே நகர்த்தலாம். a1 என்ற கட்டத்தில் இருக்கும் வெளிர் / வெள்ளை நிறத்தில் யானைக்கு முன்னால் a2 என்ற கட்டத்தில் இருக்கும் வீரனை இரண்டு கட்டங்கள் நகர்த்தினால் அது a4 என்ற கட்டத்திற்குப் போய்ச் சேரும். அதை அல்ஜீப்ரைக் குறியீட்டில் a4 என்று குறிக்கலாம். அதே வீரனை ஒரே ஒரு கட்டம் முன்னால் நகர்த்தினால் அதை a3 என்று குறிக்கலாம். விதிமுறை # 4 எதிரணியை நோக்கி நகர்த்தப்பட்ட வீரர்கள் எவரையும் பின்னால் நகர்த்த இயலாது. விதிமுறை # 5 சென்றடையக்கூடிய கட்டத்தில் வேறு எந்தக் காயும் இருக்கக்கூடாது. en passant விதிமுறையைப்பற்றி பிறகு விளக்கமாகப் பார்ப்போம். இனி வீரர்கள் எதிரணியிலிருக்கும் காய்களை வெட்டிச் சாய்க்கும் / வீழ்த்தும் விதிமுறை. எந்த ஒரு வீரனும் தனக்கு முன்னால் உள்ள கட்டத்திற்கு வலப்பக்கத்தில் அல்லது இடப்பக்கத்தில் அடுத்த கட்டத்தில் (the square of the same colour diagonally across the right or left in the next rank) எதிரணியின் எந்த ஒரு காய் இருந்தாலும் அதை வெட்டி வீழ்த்தலாம். கீழே உள்ள படங்களில் வீரன் எதிரணீயின் ஏதேனும் ஒரு காயை எப்படி வெட்ட இயலும் என்பதைக் காணலாம். Courtesy : http://en.wikipedia.org/wiki/Pawn_(chess)