லதா எழுதியவை | ஜூன் 14, 2007

# 003 சதுரங்கக் காய்களைப் பலகையில் வைக்கும் முறை


# 003 சதுரங்கக் காய்களைப் பலகையில் வைக்கும் முறை

இப்போது சதுரங்க விளையாட்டின் காய்களைப் பலகையில் வைக்கும் முறையைப் பார்ப்போம்.  சதுரங்கம் விளையாட இருக்கும் இருவரும் / இரண்டு பக்கங்களும் வெவ்வேறு (கருப்பு மற்றும் வெள்ளை அல்லது அடர் மற்றும் வெளிர்) நிறங்கள் தீட்டப்பட்ட விதவிதமான காய்களைச் சதுரங்கப் பலகையில் குறிப்பிட்ட விதிமுறைகளில் வைத்துக்கொண்டு  ஆட  ஆரம்பிப்பார்கள்.  இருபக்கங்களுக்கும் ஆரம்பத்தில் 16 காய்கள் ஆறு வகையாக இருக்கும்.
1 அரசன் / இராஜா (King)
1 அரசி / இராணி (Queen)
2 யானைகள் (Rooks)
2 மந்திரிகள் (Bishops)
2 குதிரைகள் (Knights)
8 வீரர்கள் / சிப்பாய்கள் (Pawns)
இனி இவற்றைச் சதுரங்கப் பலகையில் வைக்கும் விதிமுறைகள்:தாய்க்குலத்திற்கு முதலிடம் (ladies first) என்பதற்கிணங்க முதலில் கருப்பு ராணி கருப்புக்கட்டத்தில் வெள்ளை ராணி வெள்ளைக்கட்டத்தில் என்று நினைவில் வைத்துக்கொள்ளலாம் (இது மற்றொரு விதி).

கருப்பு                கட்டம்

அரசி (Queen)          d8

அரசன் (King)          e8

மந்திரிகள் (Bishops)     c8, f8

குதிரைகள் (Knights)     b8, g8

யானைகள் (Rooks)      a8, h8

வீரர்கள் (Pawns)        a7, b7, c7, d7, e7, f7, g7, h7

வெள்ளை              கட்டம்

அரசி (Queen)          d1

அரசன் (King)          e1

மந்திரிகள் (Bishops)     c1, f1

குதிரைகள் (Knights)     b1, g1

யானைகள் (Rooks)      a1. h1

வீரர்கள் (Pawns)        a2, b2, c2. d2, e2, f2, g2, h2

எல்லாக் காய்களும் சரியாக வைக்கப்பட்டுள்ள சதுரங்கப் பலகை

chess_initial_position

Courtesy :  http://www.chesscentral.com/chess_rule/chess_game.htm

சதுரங்கக் காய்களின் சுருக்கப்பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன

K – அரசன்/இராஜா – King

Q – அரசி/இராணி   – Queen

R – யானை        – Rook

B – மந்திரி         – Bishop

N – குதிரை        – Knight

P – வீரன் / சிப்பாய் – Pawn 

http://en.wikipedia.org/wiki/Chess_piece  -  From Wikipedia, the free encyclopedia


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

வகைகள்

Follow

Get every new post delivered to your Inbox.