# 002 அல்ஜீப்ரைக் குறியீடு (algebraic notation)
சதுரங்கப் பலகையைச் சரியாக வைத்தாயிற்று. இப்போது விளையாடும் இருவருக்கும் பெயர் சூட்டுவோம். ஒருவர் பெயர் கருப்பு மற்றவர் பெயர் வெள்ளை என்று பொதுவாக வைத்துக்கொள்வோம்.
இப்போது விளையாடும் இருவருக்கு இடையில் பலகையை வைக்கும் முறையைச் சொல்லலாம். சரியான முறையில் வைக்கப்பட்டிருக்கும் பலகையின் மேற்புறம் கருப்புப் பக்கம் என்றும் பலகையின் கீழ்ப்புறம் வெள்ளைப்பக்கம் என்று மற்றொரு விதியாகக் கொள்ளலாம்.
கருப்பு
வெள்ளை
மறுபடியும் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள :அடர் / கருப்பு / black மற்றும் வெளிர் / வெள்ளை / white இரண்டினையும் அகர வரிசைப்படி எழுதிப்பார்த்தால் அடர் / கருப்பு / blackதானே மேலே வரும் ; வெளிர் / வெள்ளை / whiteதானே கீழே வரும்.
இன்னொருவிதமாகவும் நினைவில் வைத்துக்கொள்ளலாம். இருவருக்கும் அருகில் white in the right (white square in the right hand side corner) / light in the right இருக்க வேண்டும்.
சில சதுரங்கப் பலகைகள் ஒரு ஓரத்தில் 1 2 3 4 5 6 7 8 என்ற எண்களுடனும் மற்றொரு ஓரத்தில் a b c d e f g h என்ற எழுத்துகளுடனும் இருக்கும். இந்தப் பலகையை a b c d e f g h எழுத்துகள் இருக்கும் ஓரம் கீழேயும் (வெள்ளைப் பக்கம்) 8 என்ற எண் மேலேயும் (கருப்புப் பக்கம் ) வருமாறு வைத்துக்கொள்வதே சரியான முறை. (மற்றொரு விதி)
கருப்பு
வெள்ளை
சதுரங்கப் பலகையில் a முதல் h வரை உள்ள நெடுங் கட்டங்கள் காலம்(ன்) – (column) அல்லது ஃபைல் (file) எனப்படும். 1 முதல் 8 வரை உள்ள குறுக்குக்கட்டங்கள் ரோ (row) அல்லது ரேங்க் (rank) எனப்படும். ரேங்க்குகளையும் ஃபைல்களையும் வைத்து சதுரங்கப் பலகையில் உள்ள ஒவ்வொரு கட்டமும் ஒரு தனிப்பட்ட பெயரால் அறியப்படும். எடுத்துக்காட்டாக கீழ் இடது மூலையில் உள்ள கருப்புக் கட்டம் a ஃபைலிலும் 1-ஆவது ரேங்க்கிலும் உள்ளதால் அது a1 என்று குறிக்கப்படும்.
இவ்வாறாக முதல் ரேங்க்கில் உள்ள கட்டங்கள் யாவும் a1, b1, c1, d1, e1, f1, g1, h1 என்று குறிக்கப்படும். இதேபோல் முதல் ஃபைலில் உள்ள கட்டங்கள் a1, a2, a3, a4, a5, a6 a7, a8 என்று குறிக்கப்படும்.
எல்லாக் கட்டங்களின் பெயர்களுடன் சதுரங்கப் பலகை


லதா, ரொம்ப நல்லா இருக்கு, கலக்குங்க
எழுதியவர் Kannan Ramanathan நாள் ஜூன் 12, 2007
நேரம் 3:15 பிற்பகல்